ரேடியோ சிட்டியின் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புக் வெளியீட்டு விழா


கோவை: ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலைக் கல்லூரியில் ரேடியோ சிட்டியின் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை பற்றிய பல்வேறு வரலாற்று தகவல்கள் கூறும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் கலந்து கொண்டார். 



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கோவை நகரம் வரலாற்றை கூறும் சிறப்பு நகரமாகவும், கோவை நகரை பற்றி இந்த ஆடியோ புக் வெளியிடுவது பெருமைக்குரிய ஒன்றாகும். என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், 22 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தேன். மேற்கு தொடர்ச்சி மலை, ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் என்னை கவர்ந்தது. இயற்கை வளங்களை பற்றி கட்டுரை எழுத தொடங்கினேன். கோவை நகரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மூலமாக கவுசிகா நதியின் தொடர்கதை எழுத தொடங்கினேன். குருடிமலையில் தொடங்கும் இந்நதி நொய்யல் ஆற்றின் துணை நதியாகும். இதனை தெரிந்து கொண்டு எனது தொடர்கதையின் மூலம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி நாகராஜ் பாராளுமன்றத்தில் பேசினார். இதுவே எனக்கு கிடைத்த வெற்றி என்றார். 



மேலும், இதுபோன்ற நாம் அறியாமல் இருக்கும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேடல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவும், அடுத்த சந்ததியினருக்கு இதனை கொண்டு சேர்க்கவும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.



பின்னர், விழாவில் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புத்தக தகடினை ரேடியோ சிட்டி சார்பில் வெளியிட, அதனை தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார். அதன்பின், ரேடியோ சிட்டியின் 'பிளானட்ரேடியோ.காம்' என்ற இணைய தளத்தினை ரத்தினம் கல்லூரியின் தலைவர் மதன் துவக்கி வைத்தார்.





இந்நிகழ்ச்சியில், பழங்கால ரேடியோவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மாணவர்கள் இதனை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இளங்கோவன், ரத்தினம் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்தராஜ், தன்னார்வ அமைப்புகள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...